Loading

Civil Engineer Assistant

தொழிற் முன்னேற்ற பாதை
கட்டிட பொறியியல் உதவியாளர் (சிவில் இன்ஜீனியரிங் அசிஸ்டன்ட்)

ஐடிஐ-யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்:

  • திட்டம், படம், குறியீடுகள், எழுத்துக்கள் மற்றும் பரிமாண நுட்பங்கள் ஆகியவற்றை வரையும் திறன்.
  • ஆட்டோகேடு மென்பொருள் உதவியுடன் ஒற்றை மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் 3D மாடலிங் உருவாக்குதல்.
  • சுவர், தளம், பூச்சு பூசுதல் மற்றும் பாயிண்டிங் போன்றவற்றை பற்றி அறிதல்.
  • பல்வேறு வகையான கட்டுமான பொருட்கள், பாதுகாப்புப் பொருட்கள், ஈர தடுப்பு பொருட்களைக் கண்டறிதல்.
  • செயின், டேப், பிரிஸ்மாட்டிக் காம்பஸ், பிளேன் டேபிள், லெவலிங் கருவி, தியோடலைட், டோட்டல் ஸ்டேசன் ஆகியவற்றை பயன்படுத்தி அளத்தல் மற்றும் தளத்திட்டம், வரைபடம், வரையறைகளை தயாரித்தல்.
  • மரத்தின் தன்மையை அடையாளம் கண்டு கை மற்றும் திறன் கருவிகளை பயன்படுத்தி அறுத்தல், திட்டமிடல் மற்றும் மேற்பரப்பை சரிசெய்தல்.
  • கம்பி கட்டும் அட்டவணையை தயாரித்து மதிப்பிடப் பட்ட பொருட்களின் அளவை கணக்கிடுதல்.
  • 3D மேக்ஸ் மற்றும் ரிவிட் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி கட்டிட கலை திடமாடலிங், முப்பரிமாண கட்டிட படம் ஆகியவற்றை உருவாக்குதல்.
  • விரிவான விவரக்குறிப்புடன் வெவ்வேறு உருப்படிகளின் விலை பட்டியலை தயாரித்தல்.

ஐடிஐ முடித்தபின் வேலைவாய்ப்புகள்:

  • மாநில மற்றும் மத்திய பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் தொழில்நுட்ப வல்லுநர் ஆகலாம்.
  • தனியார் பெரிய கட்டுமான நிறுவனங்களான L&T (Larsen & Toubro), P& C (Periyasamy & Chinnasamy) போன்றவற்றில் வேலைவாய்ப்புகள்.
  • சிறிய நிறுவனங்களில் சிவில் இன்ஜீனியரிங் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றலாம்.
  • சிறிய துறை நிறுவனம், சொந்த நிறுவனம், சுய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளர்.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்.

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்:

  • மின்சாதனங்களை நிறுவுதல் மற்றும் எர்த்திங் செய்தல்.
  • பல்வேறு கணித கணக்கீட்டை நிரூபிக்கவும், வேலைக்கான வரைபடம் மற்றும் நடைமுறை செயல்பாடுகளை வரையவும் தெரிந்திருத்தல்.
  • அடிப்படை கணினி சேவைகள் மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்துதல்.
  • நிர்வாகத்திற்கு ஏற்ப தொழிலாளர்கள், தகவல் தொடர்பு மற்றும் குழு மேளாண்மை திறன் இவற்றை பெற்றிருத்தல்.
  • பாதுகாப்பான பணி நடைமுறைகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவற்றை அறிந்திருத்தல்.

ஐடிஐ முடித்தபின் என்னவாகலாம்:

  • ஆரம்ப நிலை

அரை திறனுடைய சிவில் இன்ஜீனியரிங் அசிஸ்டெண்ட் ஆகலாம், தொழிற்பழகுனராக சேரலாம்.

  • இடை நிலை

உயரமான கட்டிடங்கள், கட்டிடக் கலைஞர்கள் அலுவலகம், பில்டர்ஸ் ஆகிவற்றில் கல உதவி மேற்பார்வையாளராக பணியாற்றலாம்.

  • மூத்த நிலை

கட்டுமான உபகரணங்களுக்கான சொந்த நிறுவனம், ஒப்பந்தம், சொந்தக் கட்டிட பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம்.

ஐடிஐ முடித்தபின் என்ன படிக்கலாம்:

  • பொறியியல் பட்டயப் படிப்பில் LATERAL ENTRY மூலமாக முழுநேர மற்றும் பகுதிநேர படிப்பில் சேரலாம்..
  • தொழிற் பழகுனராக சேர்ந்து தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழை பெறுதல்.
  • ஐ டி ஐ களில் பயிற்றுனராக பணியில் சேருவதற்கு (Craft Instructor Training Scheme) பயிற்றுனர் பயிற்சி மையத்தில் சேர்ந்து சான்றிதழை பெறுதல்.
  • திட்டம், படம், குறியீடுகள், எழுத்துக்கள் மற்றும் பரிமாண நுட்பங்கள் ஆகியவற்றை வரையும் திறன்.
  • ஆட்டோகேடு மென்பொருள் உதவியுடன் ஒற்றை மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் 3D மாடலிங் உருவாக்குதல்.
  • சுவர், தளம், பூச்சு பூசுதல் மற்றும் பாயிண்டிங் போன்றவற்றை பற்றி அறிதல்.
  • பல்வேறு வகையான கட்டுமான பொருட்கள், பாதுகாப்புப் பொருட்கள், ஈர தடுப்பு பொருட்களைக் கண்டறிதல்.
  • செயின், டேப், பிரிஸ்மாட்டிக் காம்பஸ், பிளேன் டேபிள், லெவலிங் கருவி, தியோடலைட், டோட்டல் ஸ்டேசன் ஆகியவற்றை பயன்படுத்தி அளத்தல் மற்றும் தளத்திட்டம், வரைபடம், வரையறைகளை தயாரித்தல்.
  • மரத்தின் தன்மையை அடையாளம் கண்டு கை மற்றும் திறன் கருவிகளை பயன்படுத்தி அறுத்தல், திட்டமிடல் மற்றும் மேற்பரப்பை சரிசெய்தல்.
  • கம்பி கட்டும் அட்டவணையை தயாரித்து மதிப்பிடப் பட்ட பொருட்களின் அளவை கணக்கிடுதல்.
  • 3D மேக்ஸ் மற்றும் ரிவிட் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி கட்டிட கலை திடமாடலிங், முப்பரிமாண கட்டிட படம் ஆகியவற்றை உருவாக்குதல்.
  • விரிவான விவரக்குறிப்புடன் வெவ்வேறு உருப்படிகளின் விலை பட்டியலை தயாரித்தல்.

 civil engineering is the applied science of physics and mathematics to address the infrastructural needs of human civilization. This includes construction engineering, bridge engineering, highway engineering, and the basic maintenance of roads, canals, dams, and buildings.