தொழிற் முன்னேற்ற பாதை
இயந்திரவேலையாள் & இயந்திரவேலையாள் அரவை
ஐடிஐ-யில ஐடிஐ முடித்தபின் வேலைவாய்ப்புகள் :
அரசு ஐடிஐ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிமணை உதவியாளர் பணி.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்திய இரயில்வே, ஹெவி வெஹிகிள் பேக்டரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சுரங்கம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அணு மின் நிலையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நிறுவனம், மற்றும் பல.
தனியார் பெரு உற்பத்தி நிறுவனங்கள் உதாரணமாக Renault Nissan, TVS, Ford, Hyundai Ltd
.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில்.
இயந்திர வெட்டு கருவி உற்பத்தித்தொழில் நிறுவனங்கள் அடிசன், எஸ்.ஆர்.பி.லிமிடெட், மற்றும் பல .
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்.
தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்:
பாதுகாப்பாக வேலைசெய்யும் நடைமுறைகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் பணியிடத்தூய்மை கடைபிடித்தல் பற்றி அறிந்திருத்தல்.
வழக்கமான மற்றும் சிஎன்சி இயந்திரங்களை இயக்குதல். Geometrical Tolerance பற்றிய அறிவை பெற்றிருத்தல்.
இயந்திரங்களில் ஏற்படும் இயக்க பிழைகளுக்கான காரணம் கண்டறிந்து பழுதினை நீக்குதல்.
ஐடிஐ முடித்தபின் என்னவாகலாம்:
ஆரம்ப நிலை
பயிற்சி இயந்திர ஆபரேட்டர்,இயந்திர ஆபரேட்டர், அரை திறனுடைய வேலையாள் –
தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநராக சேர்ந்து தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழை பெறுதல்.
ஐடிஐகளில் பயிற்றுநராக பணியில் சேருவதற்கு (Craft instructor training scheme) பயிற்றுநர் பயிற்சி மையத்தில் சேர்ந்து சான்றிதழை பெறுதல்
பொறியியல் பட்டயப்படிப்பில் Lateral Entry மூலமாக முழு நேர மற்றும் பகுதி நேரப்படிப்பிலும் சேரலாம்.
டிஜியிடியால் நடத்தப்படும் மேம்படுத்தப்பட்ட பட்டயப்படிப்பில் சேரலாம்
தேசிய திறன் பயிற்சி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு குறுகிய கால படிப்புகளில் CAD/CAM சேரலாம்
ITI machinist is a technical program that deals in making machines parts, materials used in the parts of the machine, tools used in making and modifying machines, the importance of grease, and all other aspects of machine making. It is a technical course in the mechanical field.